ஏசுவையே துதிசெய் நீ மனமே

tamil christian message, tamil christian book

1820 ஆம் ஆண்டு சரபோஜி மன்னனாக முடிசுட்டப்பட்ட போது சாஸ்திரியார்அவருக்கு வாழ்த்துப்பா ஒன்றைப் பாடினார். மகிழ்ந்த மன்னன் தான் வணங்கும் தஞ்சை பிரகதீஸ்வரர் மீது ஒரு குறவஞ்சி படைக்க சாஸ்திரியரை வேண்டினார். இதை எதிர்பாராத சாஸ்திரியர் திடுக்கிட்டார். ஏனெனில் அவர் இயேசு ஒருவரேயன்றி வேறொருவரையும் துதித்து ஆராதிப்பதில்லை. தன் பக்தி வைராக்கியத்தின்படி அரசரிடம் அமைதியாக தன் நிலையை எடுத்து கூறினார். ஆனால் சரபோஜியோ விடுவதாக இல்லை. பாடல்கள் நிறைந்த முழு நூலைப் பாடாவிட்டாலும் ஒரு பல்லவி போன்ற காப்பு செய்யுளையாவது வினாயகர்
மீது பாடிக்கொடுக்க வற்ப்புறுத்தினார்.

வேதநாயகம் சாஸ்திரியருக்கு இக்கட்டான நிலை. தன்னை மிகவும் மதித்து அரவனைத்துவரும் அரசரின்வேண்டு கோள் ஒருபுறம். தன்னையே தியாகப் பலியாக கொடுத்த இயேசு ஒருபுறம்.

மிகுந்த மனப் போராட்டத்துடன் சாஸ்திரியார் தன் வீடு திரும்பினார். வேதனையோடு தமது நிலையை மனைவியிடம் கூறினார். "கடவுளைப் பாடும் வாயால் இப்படியும் ஒன்றைப் பாடப் போறீங்களா" என வினாவார் மனைவி இரவு முழுவதும் யோசித்தார்.

காலையில் மன்னனிடம் சென்று பாடினார்

ஏசுவையே துதிசெய் நீ மனமே
ஏசுவையே துதி செய் - கிறிஸ்து

மாசணுகாத பராபர வஸ்து
நேச குமரன் மெய்யான கிறிஸ்து

அந்தரவான் தரையுந் தரு தந்தன்
சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன்

எண்ணின காரியம் யாவுமுகிக்க
மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க

பாடிவிட்டு " இறைப்பணியைக் கட்டுப்படுத்தும் பரிசில்களில்தனக்கு நாட்டமில்லை என்பதையும் ஆணித்தரமாகக் கூறினார்.

ஏசுவையே(ஏ) துதிசெய்
இயேசுவை மட்டுமே துதி செய் என்று சாஸ்திரியார் பாடினதை கேட்டு இயேசுவின் மேல் சாஸ்திரியார் கொண்ட விசுவாசத்தை மன்னர் பெரிதும் பாராட்டினார். இயேசு தெய்வத்தைப் பற்றி எங்குமே பேச அனுமதி கொடுத்தார்.

tamil christian article, tamil daily devotion, tamil christian devotion, tamil message, www.christsquare.com, tamil christian stories