விசுவாசிக்கிறவன் பதறான்

tamil christian message, tamil christian book

ஒரு வீட்டில் நிறைய கிளிகள் இருந்தது.. அவற்றிற்கென வீட்டில் கம்பிவலையினால் செய்யப்பட்ட பெரிய கூண்டும் இருந்தது.

ஆனாலும் எவ்வளவு கவனமாக இருந்தாலும் சில சமயங்களில் ஏதாவது ஒரு வழியில் திடீரென பூனை வந்து ஓரிரு கிளிகளைப் பிடித்து விடுவதும், கொல்வதும் நடந்து கொண்டு தான் இருந்தது. கிளிகள் எப்போதும் கீச்மூச்சென்று கத்திக்கொண்டே இருந்ததால் பூனை வருவதை வீட்டுக்காரரால் கணிக்கமுடியவில்லை.

அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. கிளிகளுக்கெல்லாம் "பூனை, பூனை " என்று கத்த பயிற்சி கொடுத்தார். கிளிகளும் அதை நன்றாகவே கற்றுக் கொண்டன. ஆனால் சில சமயங்களில் திடீர் திடீரென்று பூனையே வராதிருக்கும்போதும் "பூனை , பூனை " என்று சம்மந்தமே இல்லாமல் கத்தின. வீட்டுக்காரர் உடனே தடியுடன் ஓடி வருவார்.அங்கே பூனையே இருக்காது இருந்தாலும் அவை நாளடைவில் பழக்கப்பட்டு விடும் என எண்ணி சமாதானப்படுத்திக் கொண்டார்.

கிளிகள் இப்போது நன்றாகப் "பூனை, பூனை " என்று கத்த பழகிவிட்டன. வீட்டுக்காரருக்கு நிம்மதி. இனி பூனை வந்தால் கிளிகள் கத்திக் காட்டிக் கொடுத்து விடுமே!

ஒரு நாள் இரவு கிளிகள் இருந்த கூண்டு சரியாக மூடப்படவில்லை. அந்த சமயத்தில் பூனை உள்ளே நுழைந்து விட்டது. பூனையைக் கண்டதும் கிளிகள் தாம் கற்றுக் கொண்ட பூனை என்ற வார்த்தையை மறந்து போயின. தங்களின் பழைய சுபாவப்படி கீச்மூச்சென்று கத்தத் தொடங்கின. எனவே பூனை வந்ததை வீட்டு எஜமான் அறிந்து கொள்ளவில்லை. பூனை இந்த முறை இன்னும் கூடுதலான கிளிகளைப் பிடித்துக் கொன்றது.

நாம் சும்மா இருக்கும் போதெல்லாம் கர்த்தருடைய வார்த்தைகளை உச்சரிக்கிறோம். ஆனால் பிரச்சினை வந்தால் மட்டும் சகலமும் மறந்து பழையபடி புலம்ப ஆரம்பித்து விடுகிறோம். இனியாவது வார்த்தைகளைக் கொண்டு பிரச்சினைகளை ஜெயிப்போமா ?

"விசுவாசிக்கிறவன் பதறான்" ஏசாயா 28 :16

tamil christian article, tamil daily devotion, tamil christian devotion, tamil message, www.christsquare.com, tamil christian stories