பைபிள் புதிய மொழிபெயர்ப்பிலிருந்து இஸ்ரேல் என்ற வார்த்தையை நீக்குகிறது டென்மார்க்கின் பைபிள் சொசைட்டி.

டேனிஷ் பைபிள் சொசைட்டி புதிய ஏற்பாட்டிலிருந்து “இஸ்ரேல்” என்ற வார்த்தையை நீக்கி புதிய பைபிளின் மொழிபெயர்ப்பைத் தொடங்கியுள்ளது, இந்த பதிப்பை “புதிய உடன்படிக்கை” என்று அழைக்கப்படுகிறது,இது 20 ஆண்டுகளில் முதல் டேனிஷ் மொழிபெயர்ப்பாகும். “பிபெலன் 2020” (2020 பைபிள்) என்ற திட்டத்தில் இந்த குறைபாடுகள் ஏற்பட்டுள்ளது .

இந்த புதிய மொழிபெயர்ப்பிலிருந்து இஸ்ரேல் தேசத்தைப் பற்றி சுமார் 60 குறிப்புகள் அகற்றப்பட்டுள்ளன, இஸ்ரேல் என்ற சொல் “யூதர்கள்”, “யூதர்களின் நிலம்” என்று மாற்றப்பட்டுள்ளது, இருப்பினும், எகிப்து போன்ற இன்றும் இருந்த பிற நாடுகளின் பெயர்கள் மாற்றப்படவில்லை.

நவீன இஸ்ரேலுடன் வெளிப்படையான தவறான புரிதலைத் தவிர்ப்பதற்காகவும், வேத அறிவு இல்லாத மக்கள் தவறாகப் புரிந்து கொள்ளுகிறார்கள் என்பதற்காகவும் இந்த மாற்றத்தை அவர்கள் செய்துள்ளனர்.

இச்செயலுக்கு வேத ஆரயச்சியளர்கள் பலர் சமூக வலைத்தளங்களில், புதிய ஏற்பாட்டின் அத்தகைய மைய உறுப்பு மாற்றத்தை விமர்சிக்கின்றனர். பெரும்பாலான கருத்துக்களில் அரசியல் காரணங்களுக்காக இஸ்ரேல் என்ற வார்த்தையைப் பைபிள் சங்கத்தால் அகற்றப்பட்டது என்ற பரவலான சந்தேகப்படுகிறார்கள்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE