மன்னிப்பை குறிக்கும் வகையில் புதிய எமோஜி Emoji.

மன்னிப்பைக் குறிக்கும் வகையில் சமூக ஊடகங்களுக்கு புதிய எமோஜியை அறிமுகம் செய்துள்ளனர் – 2021 இல் இருந்து பயன்பாட்டிற்கு வரும் எனத் தகவல்.

எமோஜி என்பது நம் உணர்ச்சிகள் மற்றும் செயல்களை எளிமையான முறையில் வெளிப்படுத்துவதற்கு சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் உரையாடல்களில் பயன்படுத்தக்கூடிய சிறியச் சின்னங்கள். இதில் மகிழ்ச்சி, துக்கம் போன்ற பல உணர்ச்சிகளுக்கு 3,000 எமோஜிகளுக்கு மேல் உள்ளன.

ஃபின்லாந்தின் முன்னால் ஜனாதிபதியான டார்ஜா ஹாலோனென் என்பவர் தான் ஆண்டுதோறும் அதிகாரப்பூர்வ எமோஜி தேர்வைத் தீர்மானிப்பார். அங்கு உள்ள எவாஞ்செலிக்கல் லூதெரன் தேவாலயத்தைச் சேர்ந்த டூமோ பெசோனென் என்பவர் இதுவரையிலுள்ள அனைத்து எமோஜிகளிலும் மன்னிப்பைக் குறிக்கும் வகையில் எந்த வித எமோஜியும் கண்டறியப்படவில்லை என்றும், இது நம் அன்றாட வாழ்க்கையில் மிகவும் அவசியமான ஒன்று என்றும் குறிப்பிட்டார்.

எனவே மன்னிப்பைக் குறிக்கும் எமோஜிக்கு ஒரு வடிவமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு இதயம், இரண்டு கட்டைவிரல் மற்றும் சமாதானத்தை ஊக்குவிப்பதற்கு ஒரு பிலாஸ்டர் ஆகிய சின்னங்களை உள்ளடக்கியுள்ளது.

மன்னியுங்கள் நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள் என்ற வார்த்தையின்படி, நமக்கு எதிராக விரோதம் செய்தவர்களை நாம் மன்னிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் அவ்வாறு செய்தால் நம் பரலோக தேவன் நம்மை மன்னிக்க வல்லவராக இருக்கிறார்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE