ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரஹாம் ஸ்டெயின்ஸ் தன்னுடைய பதினாறாவது வயதில் சந்தித்த கிளாடிஸ் அவர்களுடன் 1983 ல் திருமணம் நடைபெறுகிறது. அவர்களுக்கு எஸ்தர், பிலிப் மற்றும் தீமோத்தி என மூன்று பிள்ளைகள் பிறந்தனர். மிஷனரியாக வந்த கிரஹாம் ஸ்டெயின்ஸ் தன் குடும்பத்தோடு இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் தொழுநோயாளிகள் மத்தியில் சேவை செய்து வந்தார்கள். மாநிலத்தின் தலைநகரமான புவனேஸ்வர்-லிருந்து 250 கிலோமீட்டர் க்கு உள்ளே மனோஹர்புர் என்னும் கிராமத்தில் ஷகிபோ என்று அழைக்கப்படும் மக்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். அந்த மக்கள் மத்தியில் வாழ்ந்த ஸ்டெயின்ஸ் குடும்பத்தினரைப்பற்றி மனம் திறக்கின்றனர் அங்கு உள்ள ஜனங்கள்.
ஒரு நாள் அதாவது ஜனவரி 22,1999 அன்று இரவு ஸ்டைன்ஸ் மற்றும் அவரின் இரண்டு மகன்கள் தங்களுடைய வாகனத்திற்குள் தூங்கும்பொழுது அங்கே வந்த மத வெறியர்கள் அந்த வாகனத்தை தீயிட்டனர். அந்த சத்தத்தைக்கேட்ட நாங்கள் வெளியேபோய் அவர்களை காப்பாற்ற முயற்ச்சிகும்போதுதான் தெரியவந்தது அந்த மதவெறியர்கள் எங்கள் வீட்டு கதவுகளை வெளிப்புறமாய் தாளிட்டு இருந்ததை. எங்களால் காப்பாற்ற இயலவில்லை என்று கண்கலங்கும் பிக்ரம் மராந்தி என்ற 75 வயது முதியவர். மேலும் அவர் சொல்கிறார், ஸ்டைன்ஸ் குடும்பத்தினர் மிகவும் நல்லவர்கள், எங்களோடு வேறுபாடு இல்லாமல் நன்றாக பழகக் கூடியவர்கள், எங்கள் எல்லாருக்கும் அவர்கள் குடும்பத்தை மிகவும் பிடிக்கும். அவர்கள் எங்கள் கிராமத்திற்குள் வந்தபொழுது பல மாற்றங்களை செய்து எங்களை முன்னுக்கு கொண்டுவந்தார்கள். அனால் அவர்கள் மரித்து 20 வருடங்களுக்குமேலே ஆனாலும் இன்னமும் ஸ்டைன்ஸ் அவர்களும் அவர்கள் குடும்பமும் எங்கள் இருதயத்திற்குள் வாழ்கிறார்கள், இன்னமும் அவர்களுக்காக எங்கள் கிராமம் முழுவதும் துக்கம் அனுசரித்து வருகிறது என கண்ணீர்மல்க கூறினார்.
ஸ்டைன்ஸ் மற்றும் இரண்டு மகன்களின் மறைவுக்கு பின் ஒருசில வருடங்களுக்கு அப்புறம் மனைவி கிளாடிஸ் ஸ்டைன்ஸ் மற்றும் அவர்கள் மகள் எஸ்தர் ஆஸ்திரேலியாவிற்கு சென்றுவிட்டார்கள். ஆனால் அவ்வபோது கிளாடிஸ் அவர்கள் ஒடிசாவிற்கு வந்து தொழுநோயாளிகளின் இருப்பிடத்தை கண்காணித்து வருகின்றார்கள். இதுவரை அங்கே 50 ஆயிரத்திற்கும் மேலான தொழுநோயாளிகளுக்கு வைத்தியம் பார்க்கப்பட்டுள்ளது. இப்போதும் அங்கே டாக்டர், நர்ஸ் மற்றும் தொழுநோயாளிகளை சுத்தம்செய்வதற்கான ஆட்கள் என பலர் சேவைசெய்து வருகின்றனர்.
கிளாடிஸ் ஸ்டைன்ஸ் அவர்களின் சிறப்பம்சம் என்னவெனில், கடைசியாக தன் கணவரையும் குழந்தைகளையும் கொன்ற அந்த கொடியவர்களை மன்னித்ததே ஆகும். எங்கோ வசதி வாய்ப்போடு பிறந்த அவர்கள் இந்தியாவின் மீதும் ஒடிசா ஜனங்களின் மீதும் மனதுருக்கம் கொண்டு தங்களுக்குரிய எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்து, ஆண்டவருடைய நாமத்தின்நிமித்தம் அந்த தொழுநோயாளிகளை தொட்டு சுத்தம்செய்து அவர்களுக்கு வைத்தியம் செய்து, அந்த ஜனங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலகாரியங்கள் செய்தும், கயவர்களால் கொள்ளப்பட்டு, அதையும் பொருட்படுத்தாமல் அவர்களை மன்னித்து இன்னும் அந்த ஜனத்திற்காய் நிற்கிறார்கள் கிளாடிஸ் ஸ்டைன்ஸ் மற்றும் எஸ்தர் அவர்கள்.