மகத்தான மனித நேயம்..அன்னை தெரெசா.

மதர் தெரெசா தன்னைப்பற்றி உலகத்திற்கு சொல்லும் வார்த்தை: இரத்தத்தில் நான் ஒரு அல்பேனியன், குடியுரிமையில் நான் இந்தியன்; விசுவாசத்திலே நான் ஒரு கத்தோலிக்க கன்னியாஸ்திரி; அழைப்பின் படி நான் இந்த உலகத்திற்கு உரியவள்.

கோன் ஆக்னஸ், அன்னை தெரெசாவின் இயற்பெயர் தன்னுடைய ஐந்தாவது வயதில் ஞானஸ்நானம் பெற்றார், அந்த நாளிலிருந்து ஆத்துமாவைக் குறித்த அன்பு இவருடைய இருதயத்தை ஆட்கொண்டது, தன் தகப்பனாரின் திடீர் மரணத்தினால் ஆக்னஸ் தன் தாயின் வளர்ப்பில் வளர்க்கப்பட்டார், 1928ல் தன்னுடைய பதினெட்டாம் வயதில் முழுநேர மிஷனரி ஊழியத்திற்கு அவர் ஒப்புக்கொடுத்தார். அங்கு அவருடைய பெயர் மேரி தெரெசா, ஒரு வருட பயிற்சி நாட்கள் முடிந்தவுடன் இந்தியாவில் கல்கத்தாவில் உள்ள சென் மேரிஸ் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் அமர்த்தப்பட்டார், 1944 ஆம் ஆண்டு வரை அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றினார், தன்னுடைய இருபது வருட பணியில் தேவனுடைய அன்பையும், கடின உழைப்பையும், நற்பண்புகளையும், தைரியத்தையும் சுயநலமில்லாமல் தன்னுடைய மாணவிகள் மத்தியிலும் மக்களின் மத்தியிலும் வாழ்ந்து காட்டினார்.

10 செப்டம்பர் 1946 ஆம் ஆண்டு கல்கத்தாவில் இருந்து டார்ஜிலிங் செல்லும் ரயில் பயணத்தில் மதர் தெரெசா தன்னுடைய அழைப்பின் நிச்சயத்தை தேவனால் பெற்றுக்கொண்டார் “வா என் ஒளியாய் இரு” இதுதான் அவர் பெற்ற வெளிப்பாடு. அன்று முதல் அன்னை தெரெசாவின் இருதயத்தில் ஒரு ஏக்கமாய் அன்பிற்காக ஏங்கும் ஏழை மக்களுக்காக உதவி செய்ய வேண்டும் என்பதை உணர்ந்துகொண்டு, 1948 முதல்முறையாக வெள்ளை நிறத்தில் நீல வரி உள்ள சேலையை அணிந்தார், அதின் அர்த்தம் மக்களின் சேவைக்காக எப்போதும் ஆயத்தமாய் இருப்பேன். ஒரு சிறிய மருத்துவ பயிற்சியை பாட்னாவில் எடுத்துக்கொண்டு திரும்பவும் கல்கத்தாவிற்கு திரும்பினார் வாடகைக்கு ஒரு வீட்டில் தன்னுடைய உடன் வேலை செய்யும் சகோதரியுடன் தங்கியிருந்து, சாலை ஓரத்தில் இருக்கும் குஷ்டரோகிகளை தொட்டு தூக்கி, கழுவி, மருந்து போட்டு, அன்பான வார்த்தையினால் அரவணைத்து, மரணப்படுக்கையில் உள்ள பெண்களை ஆதரித்து, அனாதையாய் இருந்த குழந்தைகளை தன் பள்ளி மாணவியின் உதவியால் அவர்களை தன்னுடைய அடைக்கலத்தில் வைத்து ஆதரிக்கத் தொடங்கினார்,

அக்டோபர் 1950இல் மிஷனரீஸ் ஆப் சேரிட்டி(Missionary Of Charity) என்ற ஒரு அமைப்பை தொடங்கி 10 வருடத்திற்குள் இந்தியாவின் பல பகுதிகளுடன் ஊழியர்களை அனுப்பி சேவையை விரிவுபடுத்தினார் அதைக்கண்ட அப்போதுள்ள போப் மதர்தெரெசாவிற்கு பாராட்டு பட்டம் கொடுத்தார் இந்த சேவையை உலகெங்கிலும் உள்ள பல பட்டணங்களில் தன்னுடைய charity பணியை மேலும் விரிவுப்படுத்தினார்.

பிறருடைய வியாதியையும் வேதனையும் தன்னுடைய வலியாக உணர்ந்தார், சொல்ல முடியாத அன்பை அவர்கள்மேல் காட்டினார் ஒதுக்கப்பட்ட குழந்தைகளுக்காகவும், உணவு இல்லாதவர்களுக்காகவும் உணவு அளிக்க பாத்திரத்தைப் பணக்காரர்களிடம் ஏந்தியிருக்கிறார், ஆனால் அவருக்கு கிடைத்தது அவமானங்களும் பழிச் சொல்லும் தான், தேவனின் அன்பு இந்த காரியங்களை எல்லாம் தாங்கிக்கொள்ள பெலன் தந்தது.

அவர் பெற்ற பட்டங்கள் அனேகம், அவரை சந்திக்க அனேக பிரபலங்கள் பார்க்க வந்தனர், தன்னுடைய கடைசி நாட்களில் உடல் பலவீனத்திலும், அவருடைய சேவை பணியாளரின் எண்ணிக்கை 4000, அதுமட்டுமல்ல 123 தேசத்தில் தன்னுடைய சமூக சேவையை செய்து கொண்டிருந்தார், 1997 அன்னை தெரெசா அவர்கள் இந்த மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்று அடைந்தார். தன்னுடைய ஊழியத்தை உறுதியாய் செய்தால் கனபடுத்தப்படுவது நிச்சயம் அதுவும் பெண்ணாக நின்று சாதித்த அன்னை தெரெசா அவர்களுக்கு வீர வணக்கத்தை செலுத்துவோம்

Author: Mrs.Selvia Stephen

 

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE