உங்களுக்கு நிலாவைப்பற்றி ஒன்று தெரியுமா?

நிலவில் ஒரு பகல்பொழுது 331 மணிநேரங்கள் நீடிக்குமாம். அதாவது 13 நாட்கள் பகல் – 13 நாட்கள் இரவு. …(துல்லியமாக கூறினால் சந்திரனில் ஒருநாள் என்பது 27.32 பூமி நாட்கள் அல்லது 655.72 மணி நேரம் ஆகும்)

ஆனால் பூமியை இறைவன் அருமையாக தந்திருக்கின்றார்.
8 மணி நேரம் தூங்க
8 மணிநேரம் உழைக்க
8 மணிநேரம் களிக்க என
24 மணிநேரங்கள். இதிலிருந்தே தெரியவில்லையா அன்பர்களே இறைவனின் கைவண்ணமும் அவர் மாட்சியும்.

மனிதன் அனுபவிக்கவும் வேண்டும், அதேவேளை அவன் ஓய்வு எடுக்கவும் வேண்டும் என அக்கறை அக்கறையாக பார்த்து பார்த்து படைக்கப்பட்டதுதான் இந்த பூமி! அது மனிதனுக்காகவே படைக்கப்பட்டது.

அதனாலேயே வேதம் சொல்லுகிறது:

“வானங்கள் கர்த்தருடையவைகள்;பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்”.
(சங்கீதம் 115: 16)

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE