40,40,40, 40 என்ற எண் வேதாகமத்திலே எங்கேயெல்லாம் இருக்கு தெரியுமா?

வேதாகமத்திலே 40 என்ற எண் சோதிக்கும் நாட்களாக, வருடங்களாக, ஆட்சி காலங்களாக- திருப்புமுனையாக இருக்கிறது. நிறைய நாற்பதுகளை வேதத்தில் நீங்கள் பார்க்கலாம்.

1. இயேசு கிறிஸ்து 40 நாட்கள் பகலிலும் இரவிலும் உபவாசம் இருந்தார். பிசாசினால் சோதிக்கப்பட்டார். (மத்தேயு 4: 2, லூக்கா 4: 2)

2. தாவீது – சாலொமோன் – சவுல் 40 வருடங்கள் ஆண்டனர். தாவீது ஒன்றுபட்ட இஸ்ரவேலை ஆண்டார். சாலொமோனுக்குப்பிறகு இஸ்ரவேல் இரண்டாக பிரிந்தது.

3. இயேசு கிறிஸ்து உயிர்ந்தெழுந்தப்பிறகு 40 நாட்கள் பலருக்கு தரிசனமானார். (அப் 1: 2)

4. யூதா வம்சத்தாரின் சுமையை மனுஷன் 40 நாட்கள் சுமக்க வேண்டும். (எசேக்கியேல் 4: 6)

5. எலியா தேவ தூதன் இரண்டு முறை தந்த அடையையும் தண்ணீரையையும் புசித்து குடித்து அந்த பெலத்தில் 40 நாட்கள் ஓடினார் என்று வேதம் சொல்லுகிறது. யூதேயாவைச்சேர்ந்த பெயர்செபாவிலிருந்து ஓரேப் மலைக்கு இரவும் பகலுமாக நடந்தே 40 நாள் போனார். தன்னை எதிரிகள் கொன்று விடுவார்கள் என பயந்து நடந்தார்.

6. மோசே 40 நாட்கள் இரவும் பகலும் சீனாய் மலையில் உபவாசமிருந்து கர்த்தருடன் இருந்தான். (இப்படி இரண்டாம் முறையுமிருந்தார்.
உபா 10: 10) (யாத் 34: 28)

7. வனாந்தரத்திலே விழுந்துதீருமட்டும், உங்கள் பிள்ளைகள் 40 வருஷம் வனாந்தரத்திலே திரிந்து, நீங்கள் சோரம்போன பாதகத்தைச் சுமப்பார்கள். (எண்ணாகமம் 14: 33)

8. நோவாவின் நாட்களில் பெருமழை 40 நாட்கள் இரவும் பகலும் பெய்தது.(ஆதி 7: 4, 12, 17)

9. கானான் தேசத்தை 40 நாட்கள் உளவு பார்த்தார்கள். (எண்ணாகமம் 13: 25)

10. பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் இஸ்ரவேலர்களை 40 வருஷமளவும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுத்தார்.
(நியாயாதிபதிகள் 13: 1)

11. ஒத்னியேல் & கிதியோன் விசாரிப்பில் தேசம் 40 வருடம் அமைதலாயிருந்தது. (நியாயாதிபதி 3: 11 & 8: 28)

12. மோசே நாற்பது ஆண்டுகள் மீதியான் தேசத்தில் வாழ்ந்தார். மோசேயின் 80 வது வயதில் கர்த்தர் மோசேக்கு முட்செடியில் தரிசனமானார். (அப் 7: 30)

13. நாற்பது ஆண்டுகள் வனாந்திர பயணம் செய்தார்.

13. குற்றவாளியை 40 அடிவரைக்கும் அடிக்கலாம்; அவனை அதிலும் அதிகமாயடிக்கிறதினால் உன் சகோதரன் உன் கண்களுக்கு முன்பாக நீசனாய்த் தோன்றுவான். (உபாகமம் 25: 2-3)

14. வாசஸ்தலத்திற்க்கு செய்யப்படுகிற பலகையின் இருபது பலகைகளின்கீழே வைக்கும் 40 வெள்ளிப் பாதங்களை உண்டுபண்ணுவாயாக. (யாத் 25: 18- 19)

15. எகிப்திலிருந்து கானான் தேசத்திற்க்கு 30 லட்ச (யாத் 12:37 – ஆறு லட்சம் புருஷர்கள் & மனைவி, சராசரி 4 பிள்ளைகள்) இஸ்ரவேல் மக்கள் சென்றடைய 40 வருடங்கள் ஆனது. (உபாகமம் 2: 7)

16. நாற்பது வருடமளவு மன்னாவை புசித்தார்கள். கானான் தேசத்து தானியத்தை சாப்பிட்டவுடன் மன்னா நின்று போனது. (யாத்திரயாகமம் 16: 35 & யோசுவா 5: 12)

 

Whatsapp!!!

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

மண்ணிலிருந்து மனிதன் – அறிவியல் உண்மைகள்

மண்ணிலிருந்து மனிதன் வந்தான் என்று ...
Read More
MORE