சென்னை முழுவதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர்.

சென்னை: உலகமெங்கும் கொரோனா கொள்ளை நோயினால் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிகிறதை நாம் காண்கிறோம் அதன் தாக்கம் இந்தியாவிலும் தற்பொழுது மிகவும் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் இந்த பாதிப்பினால் அநேகர் தினமும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர், இந்த இக்கட்டான சூழ்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களை விட, ஊரடங்கால் தன் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள்தான் அதிகம் உள்ளனர்.

அப்படி உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு தன்னார்வாளர் திரு. ஸீபா அவர்கள் தன்னால் இயன்ற உதவியை செய்து வருகிறார், காலை மதியம் இரவு ஆகிய மூன்று வேளையும் உணவு அளித்து வருகிறார், அவர் தனது வீட்டிலேயே உணவு தயாரித்து, சைக்கிளில் சென்று அவர்களை நேரில் சந்தித்து உணவுகளை வளங்கி வருகிறார், மற்றும் அவர்களின் மருத்துவ தேவைகளையும் சந்தித்து வருகிறார், அவர் தினமும் சரசரியாக 25 கி.மீ அதிகமாக இன்றுவரை 700 கி.மீ தூரம் பயனம் செய்து இருக்கிறார்.

திரு. ஸீபா அவர்கள் முழு நேரச் சுவிசேஷ ஊழியர், சேவைப்பனியிலும் உற்சாகமாகத் தன்னை அர்ப்பணித்துள்ளதை நாம் பாராட்டாமல் இருக்கமுடியாது.

உதவி செய்யவேண்டும் என்ற ஆர்வம் இருந்தும் உதவி செய்ய முடியாமல் இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்பு கொண்டு பணம் கொடுத்து உதவலாம். உங்கள் சபையின் சார்பிலோ அல்லது குடும்பத்தின் சார்பிலோ ஆதரவற்றவர்களுக்கு உணவுகளை கொடுக்க ஆயத்தமாய் இருக்கிறோம்
For contact: C.J.Zeba | +91 – 98403 38880
For Contribution: Google Pay | Paytm | PhonePe : +91 – 98403 38880

தேவன் நமக்கு நல்ல ஆசீர்வாதங்களை கொடுத்திருக்கிறார் என விசுவாசிக்கின்றோம். எனவே, தேவையற்ற காரியங்களுக்கு செலவு செய்யாமல், இதுபோன்று இயலாதவர்களுக்கு உதவி செய்வோம்.
“பசியால் இருப்பவர்களுக்கு உதவுவது நம் தேவனுக்கு ஊழியம் செய்வது போன்றது. நம் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார். மத்௨5:35 ”

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

Christsquare Star Singer 2020 Ist Round Results

அன்பார்ந்த போட்டியாளர்களே!!! நடந்து முடிந்த ...
Read More
MORE