உங்கள் ஊழிய வெற்றியின் இரகசியம் என்ன ? ” என்று பிரபல பிரசங்கியார் ஸ்பர்ஜனிடம் கேட்டபோது
” என்னுடைய மக்கள் எனக்காக ஜெபிக்கிறார்கள்” என்று தயக்கமின்றி பதிலளித்தார்.
இன்னொரு இடத்திலே அவர் இவ்வாறு விளக்குகிறார் :
தேவனுக்கு கீழாக உள்ள ஊழியனின் வலிமை “அவனுடைய சபை மக்களின் விண்ணப்பங்களாகும்”.
நம்மை சுற்றி ஜெபிக்கின்ற மக்கள் இருக்கும் போது நாம் எதையும் செய்யலாம். எல்லாவற்றையும் செய்யலாம்.
ஆனால் நமது நண்பர்களும், உடன் உதவியாளர்களும் ஜெபிப்பதை நிறுத்தும் போது பரிசுத்த ஆவியானவர் நம்மை விட்டு விலகுகிறார்.
சபையின் இடத்திலே ‘இக்கபோத்’ (மகிமையில்லை) என்று எழுதப்படுகிறது.
” உங்களுடைய ஜெபம் இல்லாமல் நாம் என்ன செய்யக்கூடும் ” ?
ஜெபம் நம்மை சர்வ வல்லவரோடு இணைக்கிறது. மின்னலைப் போல மேகங்களைக்கிழித்துக்கொண்டு,” பரத்திலிருந்து இரகசியமான வல்லமையைக் ” கொண்டு வருகிறது.
கர்த்தாவே,விடாப்பிடியாக விண்ணப்பிக்கும் மக்களையும் ஆத்துமாக்களை நேசிப்பவர்களையும் எனக்குத் தாரும்.
உம்முடைய கிருபையினால் அப்போது நாங்கள் லண்டன் நகரத்தை ஒரு முனையிலிருந்து மறுமுனை வரைஅசைப்போம்*.
– ஸ்பர்ஜன்