கி.மு. 2868 ஆண்டு நடந்த உண்மை கதை, நாகமான் ஒரு சீரீய (Syria) நாட்டு ராணுவ உயரதிகாரி. அவனுக்கு குஷ்டரோகம் இருந்தது. அவனுடைய வேலைக்காரி சமாரியாவில் (Judea) ஒரு இஸ்ரவேல் நாட்டு தீர்க்கதரிசி இருக்கிறார். போய் பார்த்தால் எங்கள் ஆண்டவர் சுகமாக்குவாரென்றா ள். நாகமான் கும்பிடுகிற தேவர் வேறு, இருந்தும் தன் படை வீர்களுடன் இஸ்ரவேல் (Israel) தீர்க்கதரிசியை சென்று பார்த்தான். தீர்க்கதரிசி அவனை யோர்தான் (Jordan) நதியில் ஏழுமுறை மூழ்கி எழுந்திரு, சுத்தமாவாய் என்றார். நாகமான் என் நாட்டில் நதிகள் இல்லையா? ஏதோ மருந்து கொடுப்பானென்று நினைத்தேன்… என நம்பிக்கையில்லாமலிருந்தான். அவன் வேலைக்காரன், “அய்யா இதைவிட பெரிதா சொல்லியிருந்தா செய்வீர்களல்லவா ஆதலால் போய் நதியில் முழுகி வாருமென்றான்”. நாகமான் யோர்தான் நதியில் ஏழுமுறை மூழ்கியெழுந்தபோது குஷ்டரோகம் நீங்கி குணமானான். அவன் “உண்மையான தேவன் இவரே” என்று சொல்லி துதித்தான்.
கர்த்தரால் நாகமான் குணமடைந்த வீடியோ ..
(இது போர்த்துகீசிய மொழியில் உள்ளது)
“அப்பொழுது அவன் இறங்கி, தேவனுடைய மனுஷன் வார்த்தையின்படியே யோர்தானில் ஏழுதரம் முழுகினபோது, அவன் மாம்சம் ஒரு சிறுபிள்ளையின் மாம்சத்தைப்பேல மாறி, அவன் சுத்தமானான்.”
அப்பொழுது அவன் தன் கூட்டத்தோடெல்லாம் தேவனுடைய மனுஷனிடத்திற்குத் திரும்பிவந்து, அவனுக்கு முன்பாக நின்று: இதோ, இஸ்ரவேலிலிருக்கிற தேவனைத்தவிர பூமியெங்கும் வேறே தேவன் இல்லை என்பதை அறிந்தேன், இப்போதும் உமது அடியேன் கையில் ஒரு காணிக்கை வாங்கிக்கொள்ளவேண்டும் என்றான்.
(2 இராஜாக்கள் 5: 14-15)