Youtubeஇல் பட்டைய கிளப்பும் தமிழ் கிறிஸ்துவ பாடல்கள்.

90MM, 60MM கேசட், சிடி டிவிடி, என்று பல பரிமாணங்களில் கிறிஸ்துவ பாடல்கள் கிடைத்தன, அதற்கு ஏற்றது போல் டேப்ரெக்கார்டர் டிவிடி சிடி பிளேயர் என்று எலக்ட்ரானிக்ஸ் பெரிய சிறிய வடிவில் நம்முடைய வீட்டில் இருந்தது. ஒருவேளை நாம் பயணம் செய்யும் போது அல்லது வெளியே எங்காவது செல்லும் போது பாடல்கள் செய்திகள் கேட்க வேண்டுமென்றால் வாக்மேன் என்ற ஒரு கருவியும் அதற்கும் பேட்டரி ஹெட்செட் என்ற உபகரணம் எல்லம் தேவைப்பட்டது. ஆனால் இன்று தொழில்நுட்ப வளர்ச்சியால் எந்த ஒரு கருவியும் இல்லாமல் நாம் பயன்படுத்தும் மொபைலில் பார்த்துக் கொண்டே கேட்க முடிகிறது.

Internet இந்த காலத்தில் அது ஒரு அத்தியாவசியமான காரியமாய் மாறிவிட்டது ராணுவம், தொழில் சார்ந்த தகவல், போன்ற பயன்பாட்டில் இருந்து பொழுதுபோக்கு என்ற வட்டத்துக்குள் வந்தவுடன் அதன் வளர்ச்சி உயர ஆரம்பித்தது. Facebook, Twitter, Instagram, youtube போன்ற சமூக இணைய தளத்தின் ஆதிக்கம் இந்த உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்தது.

சினிமா பாடல் திரைப்பட காட்சிகள் அரசியல் நையாண்டி டப்ஸ்மாஷ் போன்றவற்றின் வீடியோ சமூக வலை தளத்தில் மிகவும் பிரபலம் அதுமட்டுமல்ல சமையல், மருத்துவம், அழகு குறிப்பு, அரசியல் தலைவர்களின் பேச்சுக்கள் போன்ற வீடியோவும் Trending, Viral என்ற அடைமொழியில் மக்களிடம் மிகவும் விரைவாக சென்றடைந்தது.

இப்பொழுது கிறிஸ்துவ பாடல்களும் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது, குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களில் நம்முடைய கிறிஸ்தவ பாடல்கள் சமூக வலைதளமான யூ டியூபில்(Youtube) நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது, எல்லாவிதமான மக்களையும் சென்றடைந்து அவர்களின் உள்ளத்திற்கு ஆறுதலாகவும் சந்தோஷத்தை தருவதாகவும் இருக்கிறது. சில நண்பர்கள் கிறிஸ்தவ பாடல்களை தங்களுடைய ப்லேலிஸ்டில்(PlayList) அதிக முறை கேட்கிறார்கள்.

இன்றைய சூழலில் இயேசு கிறிஸ்துவை மற்ற நண்பர்களும் தெரிந்து கொள்வதற்கு இது ஒரு ஆரோக்கியமான காரியமாய் தோன்றுகிறது. கிறிஸ்துவ பாடல்கள், செய்திகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று கமெண்டில் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து இதுபோன்ற கிறிஸ்துவை மகிமைப்படுத்தும் தகவல்கள் இணையதளத்தில் பட்டயகிளப்பட்டும். அதற்காக உண்மையாய் உழைக்கும் ஊழியர்கள், இசைக்கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு இன்னும் அதிக ஞானத்தை கர்த்தர் தர வேண்டுமென்று ஜெபிப்போம், இதன் விளைவாக இயேசுகிறிஸ்துவின் இரட்சிப்பின் செய்தியை உலக மக்கள் யாவரும் அறிந்து கொள்ளட்டும். ஆமென்.

(Visited 3 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

பண்டித ரமாபாய் வழக்கை வரலாறு.

தங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு உயிரோடு ...
Read More

தமிழ் நாட்டில் முதல் கிறிஸ்தவ ஆலயம் எது தெரியுமா நண்பர்களே!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கி.பி-72.ல் தோமா ...
Read More

Corpse Flower – சவப் பூ பற்றி தெரியுமா?

இந்தோனேசியாவில் உள்ள சுமத்திராத் தீவின் ...
Read More

கிறிஸ்து பிறப்புப் பண்டிகை: ஒரு வரலாற்றுப் பார்வை

கிறிஸ்து பிறப்புப் பண்டிகையின் தோற்றம் ...
Read More
MORE