இத்தனை அடிகள் வாங்கியும் தைரியமாக நின்ற புஜாரா!

நேற்று நடந்து முடிந்த இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையேயான டெஸ்ட் போட்டி அனைவர் மனதிலேயும் இடம்பிடித்துள்ளது என்பதை மறுக்கமுடியாது. அணியில் புதிய புதிய முகங்களாக களமிறங்க வெற்றி என்பதை எதிர்பார்க்காத நாம் அனைவரும் ஆனந்த அதிர்ச்சிக்கு உள்ளானோம் என்பது தான் உண்மை. டெஸ்ட் போட்டியில் வெற்றி அல்லது சமநிலை என இரண்டுமே பாராட்டக்கூடியதாக இருக்கும் பொழுது இந்தியாவின் புதுமுக அணி வெற்றிபெற்றது நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது. அனைத்து முக்கிய புள்ளிகளும் அணியின் வீரர்களின் தைரியத்தையும் அவர்களின் திறமைகளையும் பாராட்டிவருகிறார்கள்.

இப்படியிருக்க இந்த வெற்றிக்கு ஒரு விதத்தில் காரணமாயிருந்த சேடேஸ்வர் அரவிந்த் புஜாரா, ராஜகோட்-ல் பிறந்தவர். வலதுகை பேட்ஸ்மேன் ஆக வலம்வந்தவர், இந்த போட்டியில் கடைசியாக 210 பந்துகளுக்கு வெறும் 56 ரன்கள் மட்டுமே கொடுத்து ஆட்டத்தை நீடித்துக்கொண்டு வந்தார். இதுவும் இந்திய அணி ஜெயிக்க ஒரு காரணமாக இருந்தது என்பது உண்மை. அனால் அந்த ஆட்டத்தில் புஜாரா 8-க்கும் மேற்பட்ட முறை காயப்பட்டார் என்பது எத்தனை பேர் அறிந்திருப்பீர்கள் என்று தெரியவில்லை. அனால் புஜாரா அத்தனை முறையும் அடிகள் வாங்கியும் சோர்ந்துபோகாமல் விளையாடி ஒரு வகையில் வெற்றியும் வாங்கி தந்துள்ளார்.

இதுபோலத்தான் வாழ்க்கையில் வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருக்கிற நீங்கள் பலவிதங்களில் அடிகள்,தோல்விகள்,சோர்வுகள் என நேரிடுவதை பார்க்கின்றீர்கள். எத்தனை வந்தாலும் எதிர்த்து நின்று போராடும்பொழுது அங்கே கண்டிப்பாக ஒரு ஜெயம் உங்களுக்கு உண்டு. நம் தேவன் சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்கு சத்துவத்தை பெருகப்பண்ணுகிற தேவன் என்று வேதத்தில் வாசிக்கிறோம். மனதிலே சோர்ந்துபோய் பெலன் இழந்து நிற்கும்பொழுது அவர் உங்களுக்கு பெலனை கொடுத்து, அந்த வெற்றியை வாழ்க்கையில் பெற்றுக்கொள்ள அவர் நியமித்த பாதையில் ஓட கிருபை செய்கிறார். அந்த இயேசுவின் பெலத்தோடே ஓடி வாழ்க்கையில் வெற்றியை பெற்றுக்கொள்ளுவோம் ஆசிர்வாதமாய் இருப்போம்.

-MISBA

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE