ஆண்டவர் பங்காகவே தசம பாகம்
அன்பர்களே தாரும் அதால் வரும்
இன்பந்தனைப் பாரும்
வான்பல கனிகளைத் திறந்தாசீர்
வாதங்கள் இடங்கொள்ளாமற் போகுமட்டும்
நான் தருவேன் பரிசோதியுங்களென்று
ராஜாதிராஜா சம்பூரணர் சொல்வதால்
வேதாளராஜன் அருஞ்சிறை மீட்டாளும்
விண்ணவர் கோமானே அந்த
மேதகத்தை நன்றி ஞாபகஞ் செய்திட
விதித்தது தானே
வேதனம் வியாபாரம் காலி பறவையில்
வேளாண்மை கைத்தொழில் வேறு வழிகளில்
ஊதியமாகும் எதிலும் அவர் பாகம்
உத்தமமாகப் பிரதிஷ்டை பண்ணியே
ஆலயங்கட்ட அருச்சனை செய்ய
அதற்குளதைப் பேண - தேவ
ஊழியரைத் தாங்கி உன்னத போதனை
ஓதும் நன்மை காண
ஏழைகள் கைம்பெண்கள் அனாதப் பாலர்கள்
ஏதுகரமற்ற ஊனர் பிணயாளர்
சாலவறிவு நாகரீக மற்றவர்
தக்க துணைபெற்றுத் துக்கமகன்றிட
நம்மைப் படைத்துச் சுகம் பெலன் செல்வங்கள்
யாவும் நமக்கீந்து நல்ல
இம்மானுவே லென்றொரு மகனைத் தந்து
இவ்வாறன்புகூர்ந்து
நன்மைபுரிந்த பிதாவைக் கனம்பண்ண
நம்மையும் நம்முடயாவையும் மீந்தாலும்
சும்மதமே அதிலும் தசம பாகம்
தாவென்று கேட்கிறார் மாவிந்தை யல்லவோ