ஆராய்ந்து அறிபவரே – என்
உள்ளம் அறிந்தவரே
உந்தனைப்பாட ஏங்குதே உள்ளம்
உம்மைப்பாட வரம் வேண்டுமே
தயாபரரே அடைக்கலமே
எனைக்காக்கும் கேடகமே
ஸ்தோத்திரம் உமக்கே, துதியும் உமக்கே
தூயவர் தூயவர்க்கே
நித்தியமான என் உறவே
நிரந்தரமான என் செல்வமே
விலகிடா தேவா உறைவிடம் நீரே
புகழுவேன் உம் நாமத்தை
பெரியவரே மகத்துவரே
பரிவுடன் என்னை காப்பவரே
எடுபடா பங்கு என்றுமே நீரே
உம்மிலே நிலைத்திடுவேன்
DOWNLOAD PPT