ஆராதனை செய்கின்றேன் என் இயேசப்பா
உங்க அன்பெல்லாம் நெனச்சு ஆராதிக்கிறேன்
மன்னுயிரைக் காப்பவரே ஆராதனை
மனதுருக்கம் உள்ளவரே ஆராதனை
பாவியான எந்தன் மீது பாசம் வைத்தீர்
பாசத்தாலே உங்க ஜீவன் தந்து வீட்டீர்
ஏழை எந்தன் நோய்களெல்லாம் சுமந்தவரே
எனக்காக மரணத்தை ருசித்தவரே
நிலையற்ற உலகினில் நிம்மதியின்றி
ஏராளம் மனிதர்கள் வாழ்கின்றாரே – அப்பா
உங்க கண்களோ என்னைக் கண்டதே
உங்க கருணையை நினைச்சிட்டா
உள்ளம் பொங்குதே
மண்ணுலக மாயை என்னை மாற்றிடாமலே
மகிமையான அபிஷேகத்தால் காப்பவரே
விண்ணவரே உங்க பாதம் சேரும் வரையில்
என் மன்னவரே கிருபையால் நடத்திடுமே
DOWNLOAD PPT