ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாது
அப்பா நீர் செய்த நன்மை சொல்லிட
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்
தனிமையின் நேரத்தில் துணையாக வந்தீரே
இயேசப்பா உமக்கு என்றும் ஸ்தோத்திரம்
தடுமாறும் நேரத்தில் தாங்கி சுமந்தீரே
இயேசப்பா உமக்கு என்றும் ஸ்தோத்திரம்
அவமான நேரத்தில் ஆறுதல் தந்தீரே
இயேசப்பா உமக்கு என்றும் ஸ்தோத்திரம்