அக்கினி காற்றே தேற்றரவாளனே
பேரின்ப நதியில் தாகம்
தீர்த்திடும் ஜீவநதியே
ஜீவநதியே என்னில் பாய்ந்து செல்லுமே
வறண்ட நிலத்தில் ஆறுகள் ஓடும்
பாலைவனங்கள் செழிப்பாய் மாறும்
கண்ணீரின் பள்ளத்தாக்குகள் மாறுமே
காடியை போல கசந்திடும் வாழ்க்கை
மதுரமாக மாற்றிடுவாரே
துன்பத்தின் பாதையில் நடக்கின்ற போதும்
பாதையின் வெளிச்சம் அவரே அவரே