Alleluia kartharai eagamay

அல்லேலூயா கர்த்தரையே
ஏகமாய் துதியுங்கள்
அவர் நடத்தும் செயல்களெல்லாம்
பார்த்தோரே துதியுங்கள்
வல்லமையாய் கிரியை செய்யும்
வல்லோரைத் துதியுங்கள்
எல்லேரையும் ஏற்றுக்கொள்ளும்
இயேசுவைத் துதியுங்கள்
ராஜாதி ராஜனாம் இயேசு ராஜா
பூமியில் ஆட்சி செய்வார்
அல்லேலூயாஅல்லேலுயா
தேவனைத் துதியுங்கள்
தம்புரோடும் வீணையோடும்
கர்த்தரைத் துதியுங்கள்
இரத்ததினால் பாவங்களைப்
போக்கினார் துதியுங்கள்
எக்காளமும் கைத்தாளமும்
முழங்கிடத் துதியுங்கள்
எக்காலமும் மாறாதவர்
இயேசுவைத் துதியுங்கள்
சூரியனே சந்திரனே
தேவனைத் துதியுங்கள்
ஒளியதனை எங்கள் உள்ளம்
அளித்தோரைத் துதியுங்கள்
அக்கினியே கல்மழையே
படைத்தோரைத் துதியுங்கள்
அக்கினியாய் கல்மனதை
உடைப்போரைத் துதியுங்கள்
பிள்ளைகளே வாலிபரே
தேவனைத் துதியுங்கள்
வாழ்வதனை அவர் பணிக்கே
கொடுத்து நீர் துதியுங்கள்
பெரியவரே பிரபுக்களே
தேவனைத் துதியுங்கள்
செல்வங்களை இயேசுவுக்காய்
செலுத்தியே துதியுங்கள்
ஆழ்கடலே சமுத்திரமே
தேவனைத் துதியுங்கள்
அலை அலையாய் ஊழியர்கள்
எழுப்பினார் துதியுங்கள்
தூதர்களே முன்னோடிகளே
தேவனைத் துதியுங்கள்
பரலோகத்தை பரிசுத்தர்கள்
நிரப்புவார் துதியுங்கள்

DOWNLOAD PPT

Songs Description:
tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Alleluia kartharai eagamay songs, alleluia kartharai eagamay, alleluia kartharai eagamay lyrics in tamil
(Visited 55 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE