ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது
ஆண்டவர் இயேசு பிறந்துவிட்டார்
ஆடுவோம் பாடுவோம்
ஆனந்தம் கொண்டாடுவோம்
ஆண்டவர் இயேசு பிறந்துவிட்டார்
ஆனந்தம் நம் வாழ்வில் தந்துவிட்டார்
தூதர்கள் செய்தி கூறிட
மேய்ப்பர்கள் கண்டு துதித்திட
மன்னவன் இயேசு பிறந்துவிட்டார்
மகிழ்ச்சியை நம் வாழ்வில் தந்துவிட்டார்
சாஸ்திரிகள் கண்டு பணிந்திட
ராஜாவும் கேட்டு கலங்கிட
இம்மானுவேலன் பிறந்துவிட்டார்
இன்பம் நம் வாழ்வில் தந்துவிட்டார்