அன்பு கூர்வேன் இன்று உம்மில்
அன்பு கூர்வேன் ஆதம நேசரே
நேர்த்தியாய் என்னை மண்ணில்
காக்கும் உம் அன்பை எண்ணி
உயர்த்தி உம்மைத் துதிப்பேன்
கனம் பண்ணுவேன் உம் நாமத்தை நாளும்
எந்துள்ளம் நன்றி மிகுந்து பொங்க
என் இதயம் என் ஆத்மா
என் சிந்தை உந்தன் சொந்தம்
கல்வாரி மேட்டின் மீதே
விலையீந்தீர் என்னை மீட்க