அறுப்போ மிகுதி ஆட்கள் தேவை
அருளும் நாதனேதிவ்ய அருமைப் போதகனே
இந்திய தேசம் எங்கும் இருள்
எட்டி ஓடவே எங்கள் சபைகள் நீடவே
எமைப்புரந்த யேசுநாமம்
எவருங்காணவே இருள் அடங்கி நாணவே
வசன அமுதை வார்க்கும் நல்ல
வலவர் ஓங்கவே மதிகேடு நீங்கவே
நாடு நகரம் காடுமேடு
நாடுமிடமெல்லாம் சபைபரவு மிடமெல்லாம்
போதகன்மார் ஆவியோடுன்
புகழைஓதவே மிகுப்பொய்யை மோதவே
எண்ணிலாத ஆத்துமாக்கள்
ஏங்கிநையுதே மிகவும் இளைத்துத் தொய்யுதே
ஏழையடியார் மனுக்கிரங்கும்
எமையாட்கொண்டவா நல்லவாக்கு விண்டவா