அவரே என்னை என்றும் காண்பவர் அவரே
என்னை என்றும் நடத்துவார் அவரே
என்னோடு இருப்பவரே அவரே
தண்ணீர் மீது நடந்தவார்
அவர் காற்றையும் கடலையும் அதட்டினார்
உயிர்த்தெழுந்த தேவன் அவர்
அவர் என்னோடென்றும் இருக்கிறார்
நமக்காக மரித்தவர் அவர்
நமக்காக உயிர்த்தார்
நாம் பாவம் கழுவ தன்னை
சிலுவையிலே அவர் தந்தார்
மேகங்கள் நடுவில் இடி
முழக்கத்தின் தொனியில்
ராஜாதி ராஜாவாய் இந்த
அகிலத்தை ஆளுகை செய்வார்
இயேசுவே அதிகாரம் நிறைந்தவர் இயேசுவே
அகிலத்தை ஆள்பவர் இயேசுவே
உலகத்தின் இரட்சகர் இயேசுவே