தேவா பிரசன்னம் தாருமே
தேடி உம்பாதம் தொழுகிறோம்
இயேசுவே உம் திவ்விய நாமத்திலே
இன்பமுடன் கூடி வந்தோமே
வானம் உமது சிங்காசனம்
பூமி உமது பாதஸ்தலம்
பணிந்து குனிந்து தொழுகிறோம்
கனிந்தெம்மை கண்பாருமே
சாரோனின் ரோஜா லீலி புஷ்பம்
சாந்த சொரூபி என் இயேசுவே
ஆயிரம் பேரிலும் சிறந்தோராம்
ஆண்டவரைத் தொழுகிறோம்
கர்த்தர் செய்த உபகாரங்கள்
கணக்குரைத்து எண்ணலாகுமோ
இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி
இரட்சகரைத் தொழுகிறோம்
கர்த்தர் சமூகம் ஆனந்தமே
பக்தர் சபையில் பேரின்பமே
கர்த்தர் நாமத்தைக் கொண்டாடுகிறோம்
சுத்தர்கள் போற்றும் தேவனே
நூற்றிருபது பேர் நடுவே
தேற்றரவாளனே வந்தீரே
உன்னத ஆவியே ஊற்றிடுமே
மன்னவனே இந்நேரமே
எப்போ வருவீர் என் இயேசுவே
ஏங்கி உள்ளம் உம்மைத் தேடுதே
பறந்து விரைந்து தீவீரமே
இறங்கி வாரும் இயேசுவே
DOWNLOAD PPT
Songs Description: