கண்களை ஏறெடுப்பேன்
என் கண்களை ஏறெடுப்பேன்
அல்பா ஓமேகா என் தேவன் நீர்
கண்களை ஏறெடுப்பேன்
துன்பங்கள் என்னை சூழ்ந்தாலும்
தனிமையில் நான் நடந்தாலும்
அஞ்சிடேன் கர்த்தரை நோக்கிடுவேன்
அவரே என் ஆதரவே
நன்மையும் கிருபையும்
என்னை என்றும் தொடருமே – என்
இருதயம் உம்மையே சார்ந்திருக்கும்
உம்மில் நான் செழித்திருப்பேன்