கன்மலை மீதென் கால்கள் நிறுத்தினீர்
உன்னதங்களில் உட்காரச் செய்தீர்
உளையான சேற்றில் உழன்ற என்னையும்
தூக்கீனீர் கழுவினீர் காத்து வருகீறீர்
பாவங்களை மன்னித்தீர் சாபங்களை நீக்கீனீர்
சத்துருவின் கையினின்று விடுதலை அளித்தீர்
தினம் தினம் உம் புகழை நான் பாடுவேன்
இயேசையா இயேசையா உம் புகழ் பாடுவேன்
எல்லையில்லா ஆனந்தம் எந்தன் வாழ்வில் வந்ததைய்யா
சொல்லொன்னா பேரின்பம் என் உள்ளத்தில் பொங்குதய்யா
ஜீவனுள்ள நாளெல்லாம் உம்மைப் பாடுவேன்
இயேசையா இயேசையா உம் புகழ் பாடுவேன்
Kanmalai Meethu En Kaalgal Song Lyrics and Chords, Kanmalai Meethu PPT கன்மலை மீதென் கால்கள்