கன்மலையே கர்த்தாவே
நீர் செய்த நன்மைகள் ஆயிரம்
அதை எண்ணியே நன்றி சொல்வேன்
கண்மணி போல் காப்பவரே
அனுதினமும் என்னை நடத்தும்
உம் நல்ல வார்த்தைகள் தந்தீர்
வாழ்வின் பாதை இதுவே என்றீர்
கரம் பிடித்தே நடத்தினீர்
பலவீன நேரத்திலும்
பரிகாரியானவரே
எல்லா இக்கட்டு நேரத்திலும்
துணையாக நின்றவரே
உளையான சேற்றில் நின்று
என்னை தூக்கி எடுத்தவர் நீரே
உந்தன் மாறா அன்புக்கீடாய்
வேறொன்றும் இல்லையே
துன்பம் சூழ்ந்த வேளையிலும்
இன்பமாக வந்தவரே
தொல்லை கஷ்டங்கள் மத்தியிலும்
உம்மை துதிக்க செய்தவரே
ஜீவனுள்ள காலம் உந்தன்
நன்மை கிருபை தொடரும் என்றீர்
எந்தன் வாழ் நாளெல்லாம் உந்தன் நாமம்
பாடி மகிமைப்படுத்துவேன்-கன்மலையே
Kanmalaye Karthavae Song lyrics – Johnsam Joyson songs lyrics, kanmalaya Johnsam joyson, Tamil christian songs lyrics