கர்த்தரை துதிப்பதும் கீர்த்தனம்
பண்ணுவதும் எவ்வளவு நல்லது
அல்லேலூயா அல்லேலூயா
சேனைகளின் கர்த்தாவே -உம்
வாசஸ்தலங்கள் எவ்வளவு
மேன்மையும் இன்பமானவை
உம் பீடங்களண்டையிலே
அடைக்கலான் குருவிக்கு வீடே
உம் சமுகத்தண்டையிலே
தகைவிலான் குஞ்சுக்கு கூடே
ஆகாமியக் கூடாரங்களில்
ஆயிரம் நாளைப் பார்க்கிலும்
உம் ஆலய வாசலிலே
காத்திருக்கும் நாள் நல்லது
தேவன் தங்கும் உள்ளம்
அது ஜீவனுள்ள தேவாலயம்
அது பரிசுத்தர் வாசம் செய்யும்
பரலோக தேவ ஆலயம்