கேரூபின் சேராபின்கள்
ஓய்வின்றி உம்மைப் போற்றுதே
பூலோக திருச்சபை எல்லாம்
ஓய்வின்றி உம்மைப் போற்றிட
நீர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
எங்கள் பரலோக ராஜாவே
இந்த வானம் பூமியுள்ளோர் யாவும்
உந்தன் நாமத்தை உயர்த்தட்டுமே
பூமியனைத்திலும் உந்தன் மகிமை
நிறைந்து வழிகின்றதே
ஆலயத்திலும் உந்தன் மகிமை
அலையலையாய் அசைகின்றதே
துதி கன மகிமைக்குப் பாத்திரர்
எல்லாப் புகழும் உமக்குத் தானே
வானம் உமது சிங்காசனம்
பூமி உந்தன் பாதபடி
நாங்கள் உங்கள் தேவ ஆலயம்
நீர் தாங்கும் தூயஸ்தலம்
சகலமும் படைத்த என் தேவா
நீர் நித்திய சிருஷ்டிகரே
பரலோகத்தில் உம்மை அல்லா
யாருண்டு தேவனே
பூலோகத்தில் உம்மைத் தவிர
வேறொரு விருப்பம் இல்லை
என்றும் உம்மோடு வாழ
எம்மை உமக்காய் தெரிந்தெடுத்தீர்
Kerubin Serabingal Songs Lyrics, Kerubin Serabingal, கேரூபின் சேராபின்கள், Kerubin Serabingal songs.