Lyrics & Tune: Clint Pradeepan, Music: “isainavvenam” Sri Nirmalan, Sung by: Steve Rishanthan & Edwin Christianson
நீங்க நினைச்சா எல்லாம் ஆகும்
நீங்க நினைச்சா எல்லாம் கூடும்-அப்பா
மனிதனின் யோசனை பயனில்லையே
உங்களின் நினைவுகள் நடந்திடுமே
சோதனை வந்திட்ட வேளை
அதில் ஜெயிச்சிட வச்சிங்க நீங்க
துன்பங்கள் சூழ்ந்திட்ட வேளை
அதில் திடன் கொள்ள வச்சிங்க நீங்க
பாடுகள் பட்டிட்ட வேளை
உங்க வசனத்தால் உயர்த்தி விட்டீங்க
சோர்வுகள் ஆட்கொண்ட வேளை
உம்மை துதிப்பதால் நீக்கீ விட்டீங்க
என்னை வழுவாமல்
இருக்கி பிடிச்சி வச்ச இயேசு நீங்க
மனமெல்லாம் உடஞ்சிட்ட போதும்
அதை ஆற்றியே தேற்றிப்புட்டீங்க
இனமெல்லாம் பகைச்சிட்ட போதும்
உங்க மார்போடு அணைச்சுப்புட்டீங்க
உங்கள் வேதத்தினால் எங்கள் வாழ்க்கையினை
வாழ்ந்திட வழிகாட்டினீங்க
உங்கள் தியாகித்தினால்
எங்கள் மனங்களையும்
நீங்களே வென்றுப்புட்டீங்க
என்னை ஆற்றி தேற்றி
தாங்கிட்ட இயேசு நீங்க