பாவி, மனதுருகே!
ஆ வீட்டில் ஏர் காட்டு தேவாட்டுக்குப்
மாது தின்ற கனிவினை போக, மனுடர் வடிவமாக – நம்
வல்லமைப் பிதாவின் மைந்தன் புல்லதில் பிறந்தார்; அந்தோ!
வேத வாசகப்படி நெறிகாட்ட, வேதாளக்குடி ஓட்ட,-இதோ!
வித்தகத் திரித்துவ ஏகத் தத்துவ சொரூபன் வந்தார்.
விந்தைத் திருமுதல் நரர் உரு உவந்தார்,
கந்தைத் துணி அணிந்தார்; – இப்படி
மெத்தனவ ராகக் கரி சித்துனைப் புரக்க வந்தார்.
மேட்டிமையைத் துறந்தார், காட்டினிடை சிறந்தார்.
மேன்மை அனைத்தும் மறந்தார்; – இந்த
விந்தைக் கோலத் துன்னைக் கண்டு சந்திக்க வந்திருக்கிறார்.
நெரிந்த நாணலை முறியார், பொரிந்த திரியை அவியார்
நிர்ப்பந்தர் தமைப்பிரியார்; – இவர்
நீதிமான்களை அல்ல, உன்னைப்போல் பாதகரைத் தான் தேடி வந்தார்
DOWNLOAD PPT