சரணம், சரணம், அனந்தா, சச்சிதானந்தா,
தாவீதின் மைந்தா, ஓசன்னா! சரணபதந்தா.
பித்தன் என்று வெள்ளை அரைச் சட்டை அணிந்து,
பேதக ஏரோதே பரி காசம்பண்ணினான்.
கற்றூணில் சேர்த்திறுகக் கட்டி, வலுவாய்க்
காவலன் தன் சேர்வை எல்லாம் கூடி அளித்தார்.
முள்ளின் முடி செய்தழுத்தி, வள்ளல் எனவே,
மூர்க்க முடனே தடிகொண் டார்க்க அடித்தார்.
கையினில் செங்கோலதென்று மூங்கில் ஒன்றிட்டு,
காவலன் நீ யூதருக்கென் றோவியஞ் சொன்னார்.
துப்பினார் முகத்தினில் அதிக்கிரமமாய்,
துன்னிய கைக்கோலை வாங்கி சென்னியில் போட்டார்.
முழங்காலிலே இருந்து தெண்டன் பண்ணியே,
முன்னவனைத்தான் இறைஞ்சிக் கன்னத்தறைந்தார்.
DOWNLOAD PPT