Unnatha devanukkae

Songs Slides ppt Download: 
Songs Lyrics: 
tamil christian

உன்னத தேவனுக்கே மகிமை
உலகில் சமாதானமாமே
காரிருள் நீங்கிடக் காசினி மீதிலே
கதிரொளியாய் ஜெனித்தார்

அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா துதியவர்க்கே

மானிடர் மேல் இவர்கன்பிதுவோ
மனுக்கோலமாய் மனுவேலனார்
மாட்சிமை யாவையும் துறந்தே இவ்வுலகில்
மாணொளியாய் ஜெனித்தார்

தாரகை என அவர் தோன்றிடவே
நேர் பாதையில் நடத்திடவே
தற்பரன் கிருபையும் சத்திய மீந்திட
தன் ஒளியாய் ஜெனித்தார்

வாழ்த்துவோம் பாலகன் இயேசு பரன்
வல்ல தேவனின் ஏக சுதன்
வாஞ்சித்தாரே எம்மில் வாசம் செய்திடவே
வானொளியாய் ஜெனித்தார்

தாவீதின் வேர் இவராய் அவனின்
ஜெய ராஜ்ஜியம் ஸ்தாபிக்கவே
தாசனின் ரூபமாய் தாரணி மீதிலே
தாம் உதித்தார் ஒளியாய்

Songs Description: 
tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs tamil christian song mp3
Vote For Songs Text: 
Average: 5 (3 votes)
இந்தப் பாடலலில் எழுத்துப் பிழை( Spelling Mistake ) இல்லையென்றால் 5 ஸ்டாரைக் கிளிக் செய்யவும். ஒரு வேளை எழுத்துப்பிழை ( Spelling Mistake ) இருந்தால் கீழே உள்ள comments மூலம் தெரிவிக்கவும். இந்தப் பாடல் அநேக ஊழியங்களுக்கு பயன்படும் வகையில் உதவி செய்யவும்.. By Christsquare.com Team
Artist: 
Alphabets: 
Keywords: 
ulagin rachakar songs, unnatha devanukkae songs lyrics, Christmas,tamil Christmas song,,tamil Christmas song lyrics