தீர்க்கன் உரைத்த தீர்க்கமே
ஆகம நிறைவேற்றமே
இஸ்ரவேலின் பாடலே
பூர்வகாலத் தேடலே
எந்தன் முகவரி சேர்ந்ததே
புறஜாதி என்னை மீட்டதே
மீட்பின் இராகம் என்னுள் இசைக்க காரணர்
இவரையன்றி வேறு ஏது இரட்சகர்
இவருக்கீடு வேறில்ல – இவர்
நாமத்திற்கு இணையில்ல… எந்தன் இயேசுவே
தமது சாயலை மனிதனில் நம்
தேவன் வைத்தது அதிசயம்
தேவன் தாமே படைத்ததை அவன்
ஆளச்செய்ததும் அதிசயம்
பாவம் வந்த காரணம்
வீழ்ந்ததே அன்று என் இனம் – அதை
மீட்க வந்த நிவாரணம் – அவர்
மனித மீட்பின் பூரணம்…. எந்தன் இயேசுவே
வார்த்தை மாம்சமானதால் – என்
மாம்சம் ஆவியானதே
இரட்சண்யத்தின் கீர்த்தனை
புற ஜாதி வீட்டிலும் தொனிக்குதே
மரண இருளும் போனதே
விடியல் வெளிச்சம் வந்ததே
பாதை இல்லா இடங்களில் – புது
ஜீவப் பாதை திறந்ததே…. எந்தன் இயேசுவே