உலகின் இரட்சகரே உன்னத குமாரனே
ஜீவ ஒளியாய் உதித்தவரே
ஜீவன் தந்திட வந்தவரே
போற்றிடுவோம் நாம் புகழ்ந்திடுவோம்
இயேசுவின் திருநாமத்தை
இயேசு பிறந்த இந்நாளிலே
எல்லாரும் கொண்டாடுவோம்
இருளில் நடக்கும் ஜனங்களை
வெளிசத்தில் நடத்துவீர் மரண
இருளை நீக்கி நம்பிக்கை கொடுத்தீர்
மனதின் பாரம் நீங்கிடும்
இயேசு பிறந்ததால் சாத்தானின்
வல்லமை அழிந்திடும் இயேசு வந்ததால்