உம் நாமம் சொல்ல சொல்ல
கிருபை பெருகுதே
உம் நாமம் பாட பாட
என் உள்ளம் மகிழுதே
துதி கனமும் மகிமையும்
இயேசு ராஜாவுக்கே
நன்றியோடு ஆவியோடு
கரம் உயர்த்தி பாடிடுவோம்
ஓசன்னா யேகோவா அதிசியமாம்
சர்வ வல்லவராம்
அல்லேலூயா ஏக துதியோடு
புது பெலத்தோடு புது பெலத்தோடு
அவர் நாமம் துதிக்கவே
அவர் கிருபை என்றுமுள்ளது
உம் வார்த்தை சொல்ல சொல்ல
புது அற்புதம் நடக்குமே
உம் வல்லமை சொல்ல சொல்ல
அபிஷேகம் இறங்குதே
உம் இரத்தம் சொல்ல சொல்ல
பாவம் நீங்குதே
உம் அன்பு பாட பாட
ஆறுதல் கிடைக்குமே