உனக்கொரு நண்பன் இல்லையென்று
ஏங்குகின்றாயோ இப்பூவிலே
அன்னையைப் போல ஆதரிப்பார்
அல்லும் பகலும் காத்திருப்பார்
நீ கிருபையில் வாழ வழி வகுத்தார்
சோராமல் என்றும் வாழ்ந்திடவே
தகப்பனும் தாயும் கைவிட்டாலும்
தேவன் உன்னை கைவிடமாட்டார்
தம் செல்வம் போல ஆதரிப்பார்
கண்மணிபோல உன்னை பாதுகாப்பார்
உனக்கொரு நண்பன் இயேசுவுண்டு
அரவணைக்க ஒரு தகப்பனுண்டு