உந்தன் காயங்கள் எந்தன் பாவங்களோ
உந்தன் வேதனைகள் எந்தன் மீறுதலோ
எனக்காக உலகில் வந்தவரே
எந்தன் பாவம் போக்க மரித்தவரே
உந்தன் அன்பை சொல்ல வார்த்தை இல்லை
உம்மை போல உலகில் யாருமில்லை
சேற்றில் கிடந்த எனக்காக சாபம் ஆனீரோ
நாற்றம் பிடித்த எனக்காக உம் அழகை துறந்தீரோ
உந்தன் ரத்தம் சிந்தி என் பாவம் கழுவினீர்
உம்மை பலியாய் தந்து என் பாதை மாற்றினீர்
உந்தன் நேசம் அறியாமல் நான் தூரம் சென்றேனே
உந்தன் பாசம் பிரியாமல் நான் விலகி சென்றேனே
தேடி வந்தீர் என்னையும் வாழ வைத்தீட
எந்தன் பார சிலுவையை நீர் சுமந்திட