உந்தன் சமுகம் நுழைந்து
உம் நாமம் உயர்த்திடுவேன்
உந்தன் பரிசுத்த பிரசன்னம்
என் மீது பொழிந்தருளும்
உம்மை நான் ஆராதிப்பேன்
உம் முன்னே பணிந்திடுவேன்
உம் நாமம் பரிசுத்தமுள்ளது
நீர் ஒருவரே பரிசுத்தர்
உந்தன் பரிசுத்த இரத்தம்
எனக்காக சிந்தினீரே
உந்தன் சரீரத்தின்
தழும்புகள் என்னை குணமாக்கிற்றே
உம்மை நான் ஆராதிப்பேன்
உந்தன் பரிசுத்த வல்லமை
என்னையும் நிரப்பினதே
உந்தன் பரிசுத்த அக்கினி
என்னை அனலாக்குதே
உம்மை நான் ஆராதிப்பேன்
இயேசுவே…… ஆராதிப்பேன்
நீர் அழகுள்ளவர்….. நீர் ஒருவரே
தேவனே… சர்வ வல்லவரே
நீர் அன்புள்ளவர்… நீர் ஒருவரே
ஆவியானவரே….. ஆராதனை
நீர் பரிசுத்தர்…… நீர் ஒருவரே