விழி மூடியும் நீர்த்துளி வழியுதே
விழும் துளிகளில் நினைவுகள் சிதையுதே
நான் கொண்ட காயம் பெரியதே
நான் கண்ட பலதில் அரியதே
நான் போகும் பாதை புதியதே
ஆனால் உம் சத்தம் தேற்றுதே
விழி மூடியும் நீர்த்துளி வலியுதே
விழும் துளிகளில் நினைவுகள் சிதையுதே
இழந்த தருணம் மறந்து போனீர் என்று எண்ணினேன்
வனைந்த கரமே உடைத்ததென்று புலம்பி ஏங்கினேன்
வனைந்தீர் உடைக்கல…
என்னையும் மறக்கல…
சீரமைபாரிவர் என்பதை நம்புவேன்
விழி மூடியும் நீர்த்துளி வலியுதே
விழும் துளிகளில் நினைவுகள் சிதையுதே
உமது வாக்கு தரையில் என்றும் விழுவதில்லையே
தாமதங்கள் வார்த்தை தரத்தை குறைப்பதில்லையே
சொன்னதை மறக்கல கேட்டதை மறுக்கல
வார்த்தையின் ஆற்றலால் என் நிலை மாறுதே
விழி மூடியும் நீர்த்துளி வழியுதே
விழும் துளிகளில் நினைவுகள் சிதையுதே
நான் கொண்ட காயம் பெரியதே
நான் கண்ட பலதில் அறியதே
நான் போகும் பாதை புதியதே
இயேசுவின் சத்தம் தேற்றுதே
Vizhi Moodiyum Song Lyrics Chords PPT John Jebaraj, Vizhi Moodiyum neerthooli songs lyrics john jebaraj songs lyrics chords christsquare.com