யெகோவா நிசியே எந்தன் ஜெயகொடியே
உமக்கே ஆராதனை
யெகோவாயீரே தேவைகளை சந்தீப்பீர்
உமக்கே ஆராதனை
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூ அல்லேலூ அல்லேலூயா
ஜெபத்தின் காரணரே ஆராதனை
ஜெபிக்க வைத்தவரே ஆராதனை
ஜெபமே சுவாசமே ஜெபமே தூபமே
ஜெபத்தின் வீரரே ஆராதனை
அழகில் உன்னதரே ஆராதனை
அணைக்கும் ஆதரவே ஆராதனை
அன்பின் ராஜனே ஆத்தும நேசரே
சாரோனின் ரோஜாவே ஆராதனை
விடிவெள்ளி நட்சத்திரமே ஆராதனை
பிரகாச பேரொளியே ஆராதனை
விசுவாச துவக்கமும் முடிவுமானவரே
பிரமிக்கச் செய்தவரே ஆராதனை
மாட்சிமையுடையவரே ஆராதனை
மாசில்லாத தெய்வமே ஆராதனை
மாரவின் தண்ணீரை மதுரமாய் மாற்றிடும்
மகத்துவம் நிறைந்தவரே ஆராதனை
சர்வ வல்லவரே ஆராதனை
சாட்சியாய் மாற்றினீரே ஆராதனை
சாத்தானை ஜெயித்தவரே சாவை வென்றவரே
சர்வ சிருஷ்டிகரே ஆராதனை