இயேசு என் பரிகாரி
இன்ப இயேசு என் பரிகாரி
என் ஜீவிய நாட்களெல்லாம்
இன்ப ராஜா என் பரிகாரி
எனக்காக அடிக்கப்பட்டார்
எனக்காக நொறுக்கப்பட்டார்
எந்தன் நோய்கள் யாவையுமே
இன்ப இயேசு சுமந்து தீர்த்தார்
வார்த்தைகள் எந்தன் மருந்து
காயங்கள் எந்தன் ஒளஷதம்
இயேசு இரத்தம் பிசின் தைலமே
என்னை நித்தம் சுகம் ஆக்குமே
பெல்வீனம் நீக்குகின்றார்
பெலவானாய் மாற்றுகின்றார்
கழுகுக்கு சமானமாக
வாழ் வயதாக மாற்றுகின்றார்
அப்பத்தையும் தண்ணீரையும்
அனுதினம் ஆசிர்வதிப்பார்
வியாதிகளை விலக்கிடுவார்
வாழ் நாளை பூரணமாக்குவார