இயேசு ராஜன் ஏழைக் கோலம்
ஏற்று பூவில் வந்துதித்தார்
அற்புத பாலன் இம்மானுவேலன்
ஆயர் குடிலைத் தெரிந்தெடுத்தே
பெத்தலகேம் முன்னணையில்
மெத்தவுமே தன்னைத் தாழ்த்தினாரே
நமக்கோர் பாலன் வந்துதித்தாரே
நமது துன்பம் தீர்ப்பவரே
ஆலோசனைக் கர்த்தரிவர்
அதிசயம் இவர் நாமமிதே
பாவத்தில் மாளும் பாவியை மீட்க
பங்கம் இல்லாத தூயவரே
தன்னுயிரை மன்னுயிர்க்காய்
தந்து தியாக பலியாக்கினாரே
மண்ணுலகாசை ஆடம்பரங்கள்
மக்கள் புகழை வெறுத்தவரே
காரிருளை நீக்கிடும் மெய்
கர்த்தரின் எங்கள் ஜோதி பிதா
ஜெய கெம்பீரமாய் கைகொட்டிப் பாடி
ஜெகம் முழங்க துதித்திடுவோம்
அல்லேலூயா ஆர்ப்பரித்தே
அல்லும் பகலிலும் பாடிடுவோம்