இயேசுவின் பின்னே நானும் சென்று
ஆறுதல் பெற்றிடுவேன்
புல்லுள்ள இடங்களில் மேய்ப்பார்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்துவார்
கோலும் தடியும் அவரிடம் உண்டு
ஆற்றியே தேற்றிடுவார் – ஒரு
வியாதி வருத்தம் வறுமை நேரத்தில்
அன்போடு அரவணைப்பார்
ஆணிகள் பாய்ந்த கரங்களால்
எந்தன் கண்ணீரை துடைத்திடுவார்
சிறுமைப்பட்ட ஜனத்திற்கு
என்றும் ஆறுதல் செய்திடுவார்
சத்துரு மத்தியில் எனக்கொரு
பந்தியை ஆயத்தப் படுத்திடுவார்
நல்ல மேய்ப்பன் குரலை அறிவேன்
அவர் பின் சென்றிடுவேன்
அவரின் வழியில் என்னை என்றும்
அன்புடன் நடத்திடுவார்