இதைப்போல 5ஸ்டார் ஹோட்டல்ல சாப்பிட உங்களுக்கு ஆசையிருக்கா?

நம்மில் அநேகருக்கு சிறுவயதில் இருந்து ஒரு கனவு உள்ளது 5 ஸ்டார் ஹோட்டலில் சாப்பிடவேண்டும் என்று. அதில் பலருக்கு கனவுகள் நினைவாகியிருக்கும், பலருக்கு இன்னும் கனவாகவே இருக்கும். கனவாகவே இருப்பவர்களுக்கு சொல்லுகிறேன், அங்கே எல்லாவிதமான சாப்பாடுகளும் இருக்கும். அதாவது, சாதம், அனைத்துவகையான பிரியாணிகள், வறுவல், சுட்டவை என அனைத்துவிதமான சிக்கன் மட்டன் பிரான் காடை என அனைத்திலும், இனிப்பு பொருள்கள், அனைத்துவிதமான பழச்சாறுகள் குடிப்பதற்கும் இருக்கும். எல்லாருக்கும் ஒரேவிதமான ஒரு குறிப்பிட்ட பணம் கட்டினவுடன், உள்ளேசென்று நமக்கு எதுவேண்டுமோ அதையெல்லாம் சாப்பிட்டுக்கொள்ளலாம். நாம் கட்டியிருந்த பணத்திற்கும் அதிகமாய்க்கூட சாப்பிடலாம். இது தான் 5ஸ்டார் ஹோட்டலின் சிறப்பம்சம்.

நாம் அந்த குறிப்பிட்டப் பணத்தை கட்டி உள்ளேச்சென்று வெறும் சாதம் சாம்பார் ரசம் என சாப்பிட்டு வயிற்றைநிரப்பிவிட்டால், அடுத்ததாக இருக்கும் மற்ற ருசிசுவையான பதார்த்தங்களை சாப்பிடமுடியாது. அதேபோல, எனக்கு ரசம் சாம்பார் போதும் என்று நினைத்தால் அதற்கு 5ஸ்டார் ஹோட்டல்க்குள் வந்திருக்கவேண்டிய அவசியம் கிடையாது அப்படித்தானே.

அதேபோலத்தான், நம் இயேசுவிடம் அணைத்து வகையான ஆசிர்வாதங்களும், நினைத்துப்பார்க்கமுடியாத அளவிற்கு மேன்மைகளும் உண்டு. இயேசுவுக்குள் சென்றுவிட்டு, சிறிய சிறிய அளவு அற்புதங்களை அதிசயங்களை மட்டும் கேட்டு ஜெபித்தால், நாம் தான் நம் வாழ்க்கையில் நடக்கவேண்டிய பெரிய அற்புதங்களையும் ஆசீர்வாதங்களையும் இழந்துக்கொண்டிருக்கின்றோம். நம் உலகப்பிரகாரமான தகப்பனின் சொத்துக்களை உரிமையாய் எடுத்துக்கொள்ளுவதுபோல, நம் பரமதகப்பன் உண்டாக்கிய இவ்வுலகம் முழுவதிலும் உள்ள அனைத்து ஆசீர்வாதங்களையும் மேன்மைகளையும் நம்மால் அனுபவிக்கமுடியும் என்பது தான் உண்மை. “உன் வாயை விரிவாய்த்திற, நான் அதை நிரப்புவேன்” என்று வேதத்தில் வாசிக்கிறோம். நாம் பெரிய ஆசீர்வாதங்களையும் அற்புதங்களையும் தேவனிடம் கேட்கும்போது, கர்த்தர் அவருக்கு சித்தமானவைகளால் நம்மை ஆசீர்வதிக்கிறார்!

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE