ஆண்டவரின் சத்தத்தை கேட்க ஒரு குட்டி டிப்ஸ்!

நாய் குரைக்கிறது என்று சொல்லுவோம். ஆடு கத்துகிறது என்று சொல்லுவோம். கழுதை கனைக்கிறது என்று சொல்லுவோம். குயில் கூவுகிறது என்று சொல்லுவோம். என்றைக்காவது அது என்னிடம் பேசுகிறது என்று சொல்லியிருக்கோமா?

ஆனால் உண்மை என்ன? நாய் பேசுகின்றது, ஆடு பேசுகின்றது, கழுதை பேசுகின்றது, குயில் பேசுகின்றது. ஒரு நாய் பேசுகிறதை மற்ற நாய்களுக்கு மட்டும் தான் புரியும். ஒவ்வொரு ஜீவராசிகளும் கத்துகிறது என்று நாம் நினைப்போம் ஆனால் அவர்கள் கூட்டங்களுக்கு மட்டும் தான் தெரியும் அவர்கள் பேசிக்கொள்ளுகிறார்கள் என்று. ஆனால் அதிலும் ஒரு புதியவிதம் உள்ளது. சிலர் தங்கள் வீட்டில் வளர்க்கும் பிராணிகளின் முகத்தை வைத்து, சத்தத்தை வைத்து புரிந்துக்கொள்ளுவர் அதற்கு என்ன தேவை இப்பொழுது என்று. உதாரணமாக, ஒரு குழந்தை தன் மழலை பேச்சால் பேசும்போது நமக்கு புரியாது. ஆனால் அக்குழந்தையின் தாய்க்கு மட்டுமே புரியும் அக்குழந்தை தன் மழலை பேச்சால் என்ன சொல்லுகின்றது என்று. அவர்களோடு நாம் எவ்வளவு அதிகமாய் தகவல்தொடர்பு வைத்துக்கொள்ளுகிறோமோ அவ்வளவாய் அவர்கள் பேச்சுக்களை நம்மால் புரிந்துகொள்ளமுடியும்.

அதேபோல ஆண்டவரின் பிள்ளைகளாய், அந்த பிள்ளைகளின் கூட்டத்திற்குள் இருக்கும்போது ஆண்டவரின் சத்தத்ததை நம்மால் புரிந்துக்கொள்ளமுடியும். இல்லையேல், எப்படி கழுதை கூட்டத்தில் நாம் இல்லாமல் அது கனைக்கிறது என்று நினைத்துக்கொள்ளுகிறோமோ அப்படியே ஆண்டவரின் சத்தத்ததையும் ஏதோ ஒரு சத்தம் என்று நினைத்துக்கொண்டு போய்விடுவோம். கனைக்கிற கழுதையோடு, கழுதையின் கூட்டத்திற்குள் இருக்கும் ஒரு கழுதையாய், நாமும் ஆண்டவரின் பிள்ளைகள் என்ற வட்டத்திற்குள் இருக்கும்போது நம்மால் கண்டிப்பாக அவர் சத்தத்தைக்கேட்டு அவர் சித்தத்தைச்செய்ய கிருபை கிடைக்கும்!

(Visited 1 times, 2 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE