நான் ஜெபித்த ஜெபத்திற்கு நீங்கள் பதிலளிக்கவில்லையே?

ஒரு கிறிஸ்தவ சகோதரன் தினச்செய்தியை கேட்டு கொணடிருந்தபோது, அவர் இருந்த அமைதியான பள்ளத்தாக்கில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. அதை கேட்டவுடன் அவர் முழங்காலில் நின்று ஜெபிக்க ஆரம்பித்தார். அவர் ஜெபித்து கொண்டிருக்கும்போதே, தண்ணீர் அவர் இருந்த வீட்டின் வாசலில் நிறைய ஆரம்பித்தது. அவர் உடனே அடுத்த மாடிக்கு விரைந்து, ஜெபித்து கொண்டிருந்தார். தண்ணீரின் வரத்து உயர ஆரம்பித்தது. கடைசியில் மொட்டை மாடியில் நின்று ஜெபித்தார். அப்போது ஒரு ஹெலிகாப்டரில் இருந்து வெள்ள அபாயத்தில் இருப்பவர்களை மீட்டெடுப்பவர்கள், அவரை நோக்கி ஒலிபெருக்கியில் தாங்கள் ஏணியை கீழே விடுவதாகவும், அதில் ஏறி தங்களிடம் வந்துவிடுமாறும் கூவினர். ஆனால் அந்த மனிதரோ, ‘கர்த்தர் என்னை காப்பாற்றுவார், எனக்கு எந்த உதவியும் தேவையில்லை’ என்று கூறி மறுத்து விட்டார்.

சிறிது நேரத்தில் அவர் இருந்த வீடு உடைய ஆரம்பித்தது. அவர் அருகில் இருந்த ஒரு மரத்தை இறுக பற்றி கொள்ள ஆரம்பித்தார். அப்போது அங்கு ஒரு படகில் வந்த காவல் துறை காப்பாளர்கள், அவரை தங்களோடு வந்து விடுமாறு அவரை பார்த்து கூறினர். ஆனால் அவரோ ‘இல்லை கர்த்தர் தன்னை காப்பாற்றுவார்’ என்று கூறி தொடர்ந்து அந்த மரத்தையே பற்றி கொண்டிருந்தார். கடைசியில் அந்த மரமும் விழுந்து அந்த மனிதர் தண்ணீரில் மூழ்கி மரித்து போனார்.

மரித்த அவர் பரலோகம் சென்று, கர்த்தரிடம் ‘நான் இங்கு வந்திருப்பதை குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் நான் ஜெபித்த ஜெபத்திற்கு நீங்கள் பதிலளிக்கவில்லையே’ என்று முறையிட்டார். அப்போது தேவன், ‘நான் உனக்கு ஹெலிகாப்படரையும், படகையும அனுப்பினேனே நீ ஏன் அதில் ஏறி தப்பித்து கொள்ளவில்லை’ என்று கேட்டார்.

வேதாகமத்தில் நாம் எங்கும் தேவன் அசாதாரண முறையில் தான் தம்மை வெளிப்படுத்துவார் என்று எழுதப்படவேயில்லை. நம்மில் அநேகர், அற்புதங்கள் செய்யப்படும் இடத்தில் மட்டுமே தேவனுடைய கரம் இருக்கிறது என்று நினைக்கிறோம். எப்போதும் ஏதோ ஒரு அடையாளத்தையும் அற்புதத்தையும் மாத்திரம் நாம் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கிறோம். ஒரு அற்புத பெருவிழாக்களுக்கு போனால், அங்கு பேசும் ஊழியர் தங்கள் பெயரை சொல்ல வேண்டும் என்று எதிர்ப்பார்த்து போகிற கிறிஸ்தவர்கள் அநேகர். ‘நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை’ என்று தேவன் சொல்லியிருக்க, அதை உறுதியாய் இருதயத்தின் ஆழத்திலிருந்து விசுவாசிக்கிற கிறிஸ்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் இந்த நாட்களில்? கிறிஸ்தவர்கள் என்று சொல்லி கொண்டும், தினமும் வரும் தினபலனை பார்க்கிறவர்களும், ஊழியக்காரர் என்னை பற்றியும், என் குடும்பத்தை பற்றியும் , என் எதிர்காலத்தை பற்றியும் என்ன சொல்கிறார் என்று எதிர்ப்பார்த்து ஊழியக்காரரிடம் சென்று ஜெபிக்கிற கிறிஸ்தவர்களும் இன்று எத்தனை பேர்கள்? ஒரு பத்து பேர் போய் ஒரு ஊழியக்காரரிடம் ஜெபித்தால், அந்த பத்து பேருக்கும் கர்த்தர் வெளிப்பாடுகளை வெளிப்படுத்துவதில்லை, யாராவது ஒரு மிகவும் தேவையில் இருக்கும் ஆத்துமாவிற்கு தேவன் ஆவிக்குரிய ஆலோசனையையோ, தேற்றுதலையோ கூறுவார். ஆனால், பத்து பேரும் கர்த்தர் எனக்கு என்ன சொல்கிறார் என்று ஊழியர்களை நெருக்குவதால், சில வேளைகளில் தேவன் சொல்லாததை சொல்ல வேண்டிய நெருக்கம் ஊழியக்காரருக்கு ஏற்படுகிறது. அதை விசுவாசிகளே செய்வதால், அந்த ஊழியரை சொல்லி குற்றமில்லை.

நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை – (யோசுவா 1:5).

(Visited 128 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

பண்டித ரமாபாய் வழக்கை வரலாறு.

தங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு உயிரோடு ...
Read More

தமிழ் நாட்டில் முதல் கிறிஸ்தவ ஆலயம் எது தெரியுமா நண்பர்களே!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கி.பி-72.ல் தோமா ...
Read More

Corpse Flower – சவப் பூ பற்றி தெரியுமா?

இந்தோனேசியாவில் உள்ள சுமத்திராத் தீவின் ...
Read More

கிறிஸ்து பிறப்புப் பண்டிகை: ஒரு வரலாற்றுப் பார்வை

கிறிஸ்து பிறப்புப் பண்டிகையின் தோற்றம் ...
Read More
MORE