பால் காய்ச்சும்போது நீங்க இதை கண்டிப்பா செய்வீங்க!

நம் எல்லாருடைய வீட்டிலும் தினமும் பால் காய்த்து டீ அல்லது காபி குடிப்பதுண்டு. பலருடைய வீட்டில் இருமுறை பால் காய்ச்சுவார்கள். பால் காய்ச்ச பாத்திரம் எடுப்போம் ஏற்கனவே கழுவி வைத்த இடத்தில் இருந்து. நாம் எப்போதுமே எல்லா பாத்திரத்தையும் சுத்தமாக கழுவி வைப்போம் ஒவ்வொருமுறையும் உபயோகப்படுத்தினபின்பு. அனால் பால் காய்ச்சும்பொழுது மட்டும் நம்மையும் அறியாமல் ஒன்று வழக்கமாக செய்வோம். பால் காய்ச்ச பாத்திரத்தை எடுக்கும் பொழுது அதை ஒருமுறை சுற்றி பார்ப்போம் சுத்தமாக இருக்கிறதா என்று. மனது திருப்தியில்லை என்றால் மறுபடியும் கழுவி காயவைத்துவிட்டு அதன்பின் பாலை ஊற்றி அடுப்பில் வைப்போம்.

காரணம் மற்ற எதையும் சுத்தமில்லாதப் பாத்திரத்தில் வைத்து அடுப்பில் வைத்தால் அப்பொருள்களுக்கு ஒரு சேதமும் இல்லை. அனால் பால் மட்டும் சுத்தமில்லாத பாத்திரத்தில் வைத்து காய்ச்சினால் பால் முழுதும் உடனே கெட்டு போய் விடும். ஒரு சாதாரண பாலை காய்ச்சும்பொழுது இவ்வளவு சுத்தத்தின் உணர்வோடு இருக்கின்ற நாம், ஆண்டவர் நம்மை ஆசிர்வதிக்கும் போது நம் பாத்திரம் எவ்வளவு சுத்தமாக இருக்கவேண்டும்?

அப்படியாக பாத்திரம் சுத்தமில்லாமல் இருக்கின்றது என்று அறிந்தும் நாம் யாரும் பாலை அதில் ஊற்றி கெட்டுப்போக பண்ணமாட்டோம் என்பது உண்மை. அப்படியிருக்க ஆண்டவர் மட்டும் எப்படி சுத்தமில்லாத பாத்திரத்தில் ஆசிர்வாதத்தை, வரங்களை, அபிஷேகத்தை ஊற்றுவார்? வேதத்தில் கடைசி நாட்களில் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்று சொன்ன கர்த்தர் இன்று உங்களையும், உங்கள் வாழ்க்கையின் எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்ப ஆவலாயிருக்கிறார். இருதயத்தின் எண்ணங்களையும், கைகளின் செயல்களையும் சுத்திகரித்து ஆண்டவர் சமூகத்திற்கு போங்கள், அப்பொழுது நீங்கள் கேட்கும் ஆசிர்வாதத்தினால் நிரப்பப்படுவீர்கள்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE