கீறல் விட்ட குடங்கள்.

தண்ணீர் சுமக்கிற ஒருவன் தன் தோளின் மீது நீண்ட உறுதியான கோலை வைத்து, கோலின் இருபுறமும் தண்ணீர் கொள்ளும் பெரிய குடங்களைக் கட்டி தினமும் சற்று தூரத்திலிருந்து அவனுடைய எஜமானுக்கு தண்ணீர் சுமந்து வந்தான். அதில் இடது புறத்திலுள்ள குடம் நேர்த்தியாகவும், வலது புறம் உள்ள குடம் சற்று ஓட்டையுள்ளதுமாய் இருந்தது. அவன் அதிக தூரம் சுமக்க வேண்டி இருந்ததால், தினமும் வலது புறத்திலுள்ள குடத்தில் முக்கால் பகுதியே கொண்டு வீட்டிற்கு சேர்க்க முடிந்தது. இடது புறத்திலுள்ள குடம் முழு குடமாய் எப்போதும் இருந்ததால் பெருமையுற்றது. வலது புறத்திலுள்ள குடம் குறைகுடமானதால் சோர்ந்து, ஒரு நாள் தண்ணீர் சமப்பவனைப்பார்த்து எனக்கு வெட்கமாயிருக்கிறது. என்னால் முழுசேவை செய்ய முடியவில்லை என்றது. ஏன்? என அவன் வினவியபோது என்னிடத்தில் ஓட்டை இருப்பதால் குறைகுடமாகவே நான் என்றும் எஜமான் வீட்டுக்கு வருகிறேன் என்றது. அப்போது அவன் அக்குடத்தைப் பார்த்து நம் எஜமான் வீட்டிற்கு வரும் பாதையில் வலது புறபாதை நெடுகில் அழகான பூக்கள் மலர்ந்திருப்பதை பார்த்தாயா? அந்த பூக்கள் உன் பக்கத்தில் மாத்திரம் இருப்பதை அறிந்தாயா? அது எப்படியெனில், உன் குறையை அறிந்து, அப்பக்கத்தில் பூக்களின் விதைகளை போட்டு வைத்தேன். நீ அவ்விதைகளும் அறியாமல் தண்ணீர் பாய்ச்சினாய். அப்பூக்களைத்தான் தினமும் கொய்து நம் எஜமான் மகிழும்படி அவர் மேஜையில் உள்ள பூத்தொட்டியில் வைக்கிறேன். நீ இருக்கிற வண்ணமாய் இருந்திராவிட்டால் அவருடைய வீடு பூக்களின் அழகால் நிறைந்திருக்காது என்றான். இது கற்பனைக் கதையாக இருந்தாலும், நல்ல பாடம் நிறைந்தது.

நாம் எல்லோரும் ஒரு வகையில் கீறல் விட்ட குடங்கள். ஆனால் நம்மை படைத்த ஆண்டவர் நம்முடைய பலவீனங்களை அல்லது குறைகளை கொண்டே இவ்வுலகை கிருபையால் நிறைக்கிறார். நம்முடைய பலவீனங்களை அவர் பலத்தால் நிறைத்து நம்மையும் தகுதியுடையவர்களாக்கினார்.

“நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக் கூடாத பிரதான ஆசாரியன் நமக்கிரமால்… ” எபிரெயர் 4:15

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE