இது ஆட்டின் ஒரு குணாதிசயம்!

ஒருநாள் ஆடு மேய்ப்பவன், தன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான். அப்போது அவனோடு வந்திருந்த நண்பனிடம் தன்னுடைய ஆடுகளைப்பற்றி பெருமையாக பேசிக்கொண்டு இருந்தான். அதைக்கேட்டவுடன் அவன் நண்பன் கோபத்தில் மேய்ப்பனைக் கூப்பிட்டுக்கொண்டு ஒரு சிறிய மலைப்போன்ற பகுதியில் ஏறினான். அவன் மேய்ப்பனை நோக்கி ஆடுகள் பகுத்துப்பார்க்க தெரியாது என்றும், நீ மட்டுமா என்னாலும் இந்த ஆடுகளை வழிநடத்த முடியும் என்பதனை இப்போது காட்டுகிறேன் என்று சொல்லி, ஒரு ஆட்டின் பெயரைச்சொல்லி கூப்பிட்டான். ஆனால் அந்த ஆடோ திரும்பிகூடப்பார்க்காமல் சாப்பிடுவதில் ஆர்வமாக இருந்தது. தொடர்ந்து பலமுறை பலவிதங்களில் கூப்பிட்டான். ஆனாலும் அந்த ஆடு செவிசாய்க்கவில்லை.

அதை பொறுமையோடு பார்த்துக்கொண்டிருந்த அந்த மேய்ப்பனான அவன் நண்பன் சிரித்த முகத்தோடு சொன்னான் ஆடுகளுக்கு பகுத்துப்பார்க்கத் தெரியும் என்று சொல்லி, மெதுவாக அழகாக அந்த ஆட்டின் பெயரை சொல்லிக்கூப்பிட்டான். தூரத்திலிருந்த ஆடு உடனே தலையை நிமிர்த்தி தன் மேய்ப்பனை பார்த்தது. உடனே மேய்ப்பனிடம் ஓடிவந்தது.

ஆம் ஆடுகளுக்கு தன் மேய்ப்பனின் சத்தத்தை பகுத்துப்பார்க்கத் தெரியும் என்பது தான் உண்மை. ஆனால் நம்மில் எத்தனைபேர் ஆண்டவரான நம் மேய்ப்பரின் சத்தத்தை பகுத்துப்பார்க்க பழகியிருக்கின்றோம்? “என் ஆடுகள் என் சத்தத்திற்கு செவிக்கொடுக்கின்றது” என்று இயேசு சொல்கிறார். ஆம் எத்தனைக்கூட்ட ஜனங்கள் இருந்தாலும், நாம் நேசிக்கிற அனைவரும் நம்மை சூழ்ந்திருந்தாலும் இயேசுவின் சத்தம் நமக்கு கண்டிப்பாக கேட்டாகவேண்டும். அப்போது தான் நம்மால் தாங்கமுடியாத பாரமான பிரச்சனைகள் நம்மை நெருக்கும்போது இயேசுவின் சத்தத்தை நம்மால் கேட்கமுடியும். பலநேரம் ஆண்டவர் அமைதியாயிருக்கின்றார் என்று நாம் சொல்வதுண்டு. ஆனால் உண்மையென்னவெனில் அவர் நம்மோடு பேசிக்கொண்டுதான் இருக்கின்றார் ஆனால் பலமுறை நம்மால் அவரது சத்தத்தை கேட்கமுடிவதியில்லை. ஆண்டவரின் சத்தத்தை கேட்கமுடியாத அளவிற்கு இந்த உலகத்தின் பாரங்களும் பிரச்சனைகளும் நம் இருதயத்தை அமிழ்த்துகிறது. பாரமான எல்லாவற்றிற்கும் மேலாக இயேசுவின் சத்தத்தைக்கேட்கப் பழகிக்கொள்வோமாக! அதுவே என்றென்றைக்கும் நமக்கு ஆசிர்வாதமாக இருக்கும்!

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE